இதயப் பூவும்.. இளமை வண்டும் 29

Tamil Sex Stories பொதுவாக நாம் ஒரவர் மீது ஆழமான அன்பு வைத்திருந்தால்.. அவர்களின் எண்ணங்களும்.. உணர்வுகளும் மிக எளிதாக நம்மைத் தாக்கி விடும்..!! அன்றைய இரவு புவியாழினிக்கும் அதுதான் நேர்ந்தது. இரவெல்லாம் அவளுக்கு படு அவஸ்தையாக இருந்தது. காரணமே இல்லாமல் உடல் கொதித்து.. உணர்ச்சிகள் பொங்கியது.!!

வழக்கம் போல சாப்பிட்டு படுத்தவள் ஒரு தூக்கத்துக்குப் பின் விழித்துக் கொண்டாள். அதன் பின் அவளுக்கு தூக்கமே வரவில்லை. அம்மா.. அக்கா.. அக்கா குழந்தை எல்லோரும் நன்றாகத் தூங்கினார்கள். இரவில் அடிக்கடி விழித்து சிணுங்கும் கவியின் குழந்தைகூட ஆழ்ந்து தூங்கினாள்.!!

கலைந்த தூக்கம் ஏன் வரமாட்டேன் என்கிறது என்பது அவளுக்கே குழப்பமாக இருந்தது. அவள் மனதைப் பொறுத்தவரை ஒரு பிரச்சினையும் இல்லை. ஆனால் சசியின் நினைவு ஆழமாக அவளுக்குள் வேர் விட்டிருந்தது. அவன் நினைவுகள் அவள் மனதை எங்கெல்லாமோ இழுத்துச் சென்றது..!!

இருதயா வந்திருப்பதோ.. அவள் இப்போது அவன் வீட்டில் தங்கியிருக்கிறாள் என்பதோ.. அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. அந்த வகையில் அவன் மீது சந்தேகமோ.. அல்லது தன்னை அவன் புறக்கணித்து விடுவானோ என்ற கவலையோகூட இல்லை. வருந்துவதற்கு நியாயமான காரணம் ஒன்றும் இல்லாதபோதும் மனம் ஏன் இப்படி சஞ்சலத்தில் உழல்கிறது என்பது அவளுக்கு புதிராகவே இருந்தது..!!

நீண்ட நேர தூக்கமின்மைக்குப் பின் தேவை இல்லாமல் என்னன்னவோ நினைத்தாள். பழைய நினைவுகளை அசை போட்டாள். நல்லதும் கெட்டதுமான பல நினைவுகள் அவள் மனதை பாரமாக்கியது. கண் மூடிப் படுத்தாலும் ஏதோ ஒரு அவஸ்தை வந்து அவளை கடுமையாகத் தாக்கியது. உடம்பெல்லாம் சூடாகி நிலையாகப் படுக்க முடியாமல் தவிக்க வைத்தது. கை கால்களில் குடைச்சல் எடுத்து கண்டபடி புரள வைத்தது. கண்களை இறுக மூடினாலும் மனதில் நினைவுகளே படையெடுத்தன..!!

புவி அனுபவிக்காத வேதனை இல்லை. வலி இல்லை. அப்போதெல்லாம் பல இரவுகள் கூட தூக்கமில்லாமல் கண்ணீருடன் கழித்துருக்கிறாள். அப்போது அப்படி இருக்க ஒரு காரணம் இருந்தது. ஆனால் இன்று.. அப்படி எந்த ஒரு காரணமும் இல்லாமலே தவித்தாள்..!!

‘என்ன கொடுமைடி புவி இது?’ என்று அவளே கேட்டுச் சிரித்துக் கொண்டாள்.

படுக்க முடியாமல் எழுந்து அடிக்கடி பாத்ரூம் போய் வந்தாள். அம்மா பக்கத்தில் கொஞ்ச நேரமும் அக்கா பக்கத்தில் கொஞ்ச நேரமும் படுத்துப் பார்த்தாள். வராத தூக்கத்தின் மேல் கோபம் கோபமாக வந்தது. புரண்டு புரண்டு படுத்து உடம்பு வலி தாங்க முடியாமல் எழுந்து வெளியே போனாள். வானத்து இருட்டை வெறித்தாள். சசிக்கு போன் பண்ணலாமா என நினைத்தாள். சே.. இந்த நேரத்துல நல்லா தூங்கறவனை ஏன் எழுப்பணும் என்று மனதை மாற்றினாள்.

நேராகப் போய் சசி வீட்டுக் கதவைப் பார்த்தாள். பூட்டு தொங்கியது. மெல்ல திரும்பி தன் வீட்டுவரை வந்தாள். வீட்டுக்குள் செல்ல மனம் இடம் தரவில்லை. மீண்டும் திரும்பி சசி வீட்டுக்குப் போனாள். இப்படியே உடம்பு களைப்படையும்வரை.. இலக்கில்லாமல் சுற்றிச் சுற்றி வளைய வந்தாள் புவி.. !!

ஐந்து மணிக்கு குழந்தையின் சிணுங்கலில் விழித்து எழுந்தாள் புவியின் அம்மா. வீட்டுக்குள் புவியைக் காணவில்லை. பாத்ரூம் போயிருப்பாள் என நினைத்து சிணுங்கிய குழந்தையைத் தட்டிக் கொடுத்து கொஞ்சினாள். அது பாலுக்கு அழுக.. தூக்கத்தில் இருந்த கவியை எழுப்பி விட்டாள். கதவு தாழிடாமல்தான் சாத்தியிருந்தது. திறந்து கொண்டு வெளியே போனாள். பாத்ரூமைப் பார்த்தாள். புவி அங்கு இல்லை. லேசான இருட்டில் சசியின் வீட்டைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.

பூட்டிய சசியின் வீட்டுக் கதவின் மேல் சாய்ந்து நின்று கைகளை மார்பின் குறுக்கில் கட்டிக் கொண்டு கண்களை மூடியிருந்தாள் புவியாழினி.. !!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன